இந்தியா

வாய்ப்பை வீணடித்து விட்டது ஒன்றிய பாஜக அரசு: புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!

புதிய குற்றவியல் மசோதாக்கள் காலனித்துவத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

வாய்ப்பை வீணடித்து விட்டது ஒன்றிய பாஜக அரசு: புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி டிச.21ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின்போது டிச.13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினர். ஆனால் கேள்வி கேட்ட 146 எம்.பிக்களை ஒன்றிய அரசு இடைநீக்கம் செய்தது.

இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து எந்த ஒரு விவாதமும் இல்லாமல் தாங்கள் நிறைவேற்ற நினைத்த மசோதாக்களை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.

அப்படிதான், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா மூன்று புதிய குற்றவியல் மசோதாக்களை ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைக் கூட கேட்காமல் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், புதிய குற்றவியல் மசோதாக்கள் காலனித்துவத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "பிரிட்டிஷ் "காலனித்துவ" குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையில் தூக்கி எறிந்துவிட்டதா?

மூன்று மசோதாக்களில் 90-95% IPC, 95% CrPC மற்றும் 99% எவிடன்ஸ் சட்டம் வெட்டப்பட்டு, நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன என்ற உண்மையைக் கவனியுங்கள். அந்த உண்மையை யாராவது மறுக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியுமா?. உண்மையில், அசல் IPC மற்றும் சாட்சியச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே மற்றும் ஃபிட்ஸ் ஸ்டீபன் ஆகியோரை அரசாங்கம் அழியாததாக்கியுள்ளது. சட்டங்களை மாற்றுவதற்கும், மறுவரைவு செய்வதற்கும் கிடைத்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories