இந்தியா

ஒற்றை கட்சி நாடாளுமன்றமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் கடும் எதிர்ப்பு!

92 எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒற்றை கட்சி நாடாளுமன்றமா? : ஒன்றிய  பா.ஜ.க அரசுக்கு ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு இந்த தாக்குதலுக்கு விளக்கம் கொடுக்காமல் கேள்வி கேட்கும் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது.

கடந்த டிச.15ம் தேதிதான் கேள்வி எழுப்பிய கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கசேடன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று மக்களவையில் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 46 எம்.பிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத் தொடரில் மட்டும் இதுவரை 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "எதிர்க்கட்சியினர் இல்லாத நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களையும் எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்ற மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்தக் கேட்ட 47 மக்களவை உறுப்பினர்களை, மோடி அரசாங்கம் நீக்கியிருப்பது யதேச்சதிகாரம்." கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் "நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்." திருச்சி சிவா எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூதத பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "92 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையிலும் மாநிலங்களைவையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று மட்டும் ஒரே நாளில் 78 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். அடுத்தது என்ன, ஒற்றை கட்சி நாடாளுமன்றமா?" என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories