இந்தியா

கருணை கொலைக்கு அனுமதி கேட்ட பெண் நீதிபதி : தலைமை நீதிபதிக்கு எழுதிப்பட்ட பரபரப்பு கடிதம்!

கருணை கொலைக்கு அனுமதி கேட்டு பெண் நீதிபதி ஒருவர் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணை கொலைக்கு அனுமதி கேட்ட பெண் நீதிபதி : தலைமை நீதிபதிக்கு எழுதிப்பட்ட பரபரப்பு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் பணியிடத்தில் நீதிபதி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இதனால் தனது கருணை கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்க்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில், "மூத்த மாவட்ட நீதிபதி தன்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார். அதோடு நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். நான் முற்றிலும் குப்பையாக நடத்தப்பட்டேன். என்ன நடந்தது, ஏன் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள்? என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை.

கருணை கொலைக்கு அனுமதி கேட்ட பெண் நீதிபதி : தலைமை நீதிபதிக்கு எழுதிப்பட்ட பரபரப்பு கடிதம்!

இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வரை நடந்த விசாரணைகள் அனைத்தும் கேலிக்கூத்து மற்றும் ஏமாற்று வேலை. இதனால் தேவையற்ற ஒரு புழுவைப் போல உணர்கிறேன். எனவே கண்ணியமான முறையில் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயவு செய்து என்னை அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் நீதிபதிக்கே இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளதற்குப் பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories