இந்தியா

MP பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்: தொடரும் ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறை - எதிர்கட்சிகள் கண்டனம்

MP பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

MP பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்: தொடரும் ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறை - எதிர்கட்சிகள் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் பிரதமர் மோடியின் கூட்டுச் சதியை, இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அதானி முறைகேடுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.

இப்படி அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் எம்.பிகள் மீது தொடர்ந்து குறிவைத்து அவர்களது குரல்களை ஒடுக்கப்பார்கிறார்கள். அதானி மற்றும் பிரதமர் மோடி விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து உப்புசப்பு இல்லாத வழக்கைக் காரணமாகக் காட்டி ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் வரை சென்று போராடி இடைநீக்கத்தைத் திரும்பப்பெற வைத்தார். இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பா.ஜ.க குறிவைத்தது.

MP பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்: தொடரும் ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறை - எதிர்கட்சிகள் கண்டனம்

இவர் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் வாங்கியதாகப் பா.ஜ.கவினர் குற்றம்சாட்டினர். இது குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரித்தது. விசாரணையில் பங்கேற்று தனது விளக்கத்தை கொடுத்தார் மஹுவா மொய்த்ரா. ஆனால் அந்த விசாரணைக்குழுவில் இருந்த பாதிபேர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் மஹுவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எம்.பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ராவை ஒன்றிய அரசு நீக்கம் செய்துள்ளது.

இந்த நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிகள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய டி.ஆர்.பாலு, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வருக்கு அதிக அதிகாரம் உள்ளதா? அல்லது நாடாளுமன்ற குழுவுக்கு அதிக அதிகாரம் உள்ளதா?" என கேள்வி எழுப்பினார். மேலும் மஹுவா மொய்த்ராவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது அல்ல எனவும் டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories