இந்தியா

முதல்முறை... தெலங்கானாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்... பின்னடைவில் KCR !

முதல்முறை... தெலங்கானாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்... பின்னடைவில் KCR !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது.

90 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 199 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும், மிசோரத்தில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இதில் சத்தீஸ்கரில் 2 கட்டமாக நடைபெற்றது. ஐந்து மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்ற நிலையில், மிசோரத்தில் 77.04 சதவிகிதம், சத்தீஸ்கரில் 76.31 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 76.22 சதவிகிதம், ராஜஸ்தானில் 73.92 சதவிகிதம், தெலுங்கானாவில் 70.60 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின.

முதல்முறை... தெலங்கானாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்... பின்னடைவில் KCR !

இந்த சூழலில் 5 மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே கட்டமாக டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 4-ம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கை தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மீதமுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

முதல்முறை... தெலங்கானாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்... பின்னடைவில் KCR !

இதில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் இதுவரை சுமார் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போல் அம்மாநில ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இதில் அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் காஜவேல் மற்றும் காமாரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் காமரெட்டி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தெலங்கானா காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார்.

இதன் மூலம் தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளது. தெலங்கானா மாநிலம் பிரிந்து 3-வது தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories