தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை : “அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை..” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

"மழையை எதிர்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளது; மழை முடிந்த பிறகு சேதமான சாலைகள் சரி செய்யப்படும்" என அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை : “அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை..” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக கோடம்பாக்கம் மண்டலம், ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கமின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலமாக மழைநீர் வெளியேற்றும் பணியினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைகால சிறப்பு மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார்.. இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கனமழை எச்சரிக்கை : “அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை..” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, "பராகுவசபுரம் பகுதியில் 2வது, 3வது தெருவில் மட்டும்தான் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரயில்வே கல்வெட்டை (ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே செல்லும் வடிகால் பாதை) பெரிது படுத்த ரயில்வே துறைக்கும் பணம் கட்டி உள்ளோம். கல்வெட்டை பெரிதாக்க கொஞ்சம் நாளாகும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஒரு சில தெருக்களில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது.  அரை அடிதான் தண்ணீர் தேங்கி உள்ளது. அதை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரயில்வே கல்வெட்டை மாற்றாத வரை மோட்டரை வைத்துதான் தண்ணீரை வெளியேற்றியாக வேண்டும். ரயில்வே கல்வெட்டை பெரிதாக்கினாள்தான் 2 சக்கர வாகன சப்வேயில் தண்ணீர் தேங்காமல்  இருக்கும்.

கனமழை எச்சரிக்கை : “அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை..” - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

சென்னையில் இருக்கும் சப்வேயில் இது ஒன்றில் தான் தண்ணீர் இருந்தது. தற்போது அதையும் எடுத்து விட்டோம். அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை. அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். 925 மோட்டர்கள், உணவு, மரம் விழுந்தால் எடுக்கவும் தயார் நிலையில் உள்ளோம். அடைப்பு ஏற்பட்டு நிற்கும் தண்ணீரை மோட்டர் கொண்டு எடுக்கிறோம்..  முகத்துவாரத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

தண்ணீருக்கும் - தாருக்கும் விரோதம். சென்னையில் தண்ணீர் நின்றாலே சாலை பள்ளம் ஆகிவிடுகிறது. தண்ணீர் நிற்கும் சாலைகளில் பார்த்து தான் செல்ல வேண்டும். மழை நின்ற பிறகு சாலைகள் சரி செய்து தரப்படும். சேதமாக உள்ள சாலைகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்படும்" என்றார்.

banner

Related Stories

Related Stories