இந்தியா

கோவில் நிகழ்ச்சியில் வெடித்த ஹீலியம் பலூன் : காயமடைந்த 25 சிறுமிகள் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

கோவில் நிகழ்ச்சியில் ஹீலியம் பலூன் வெடித்ததில் 25 சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

கோவில் நிகழ்ச்சியில் வெடித்த ஹீலியம் பலூன் : காயமடைந்த 25 சிறுமிகள் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத்தின் மெஹுசான பகுதியில் உள்ள பிரம்மன்வாடா கிராமத்தில்கோயில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வழிபாடு முடிந்ததும் பலூன் ஒன்றை வானில் பறக்கவிடுவதற்காக அதில் ஹீலியம் வாயுவை நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பலூனை சுற்றி 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஏராளமான சிறுமிகள் நின்றுகொண்டிருந்துள்ளனர். கோவில் வழிபாடு முடிந்ததும், இந்த பலூனை வானில் பறக்கவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த சிலர் வெடி வெடித்துள்ளனர்.

இந்த வெடியில் இருந்து பறந்து வந்த தீப்பொறிகள், ஹீலியம் பலூன் மீது பட்டுள்ளது. இதில் அந்த பலூன் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில், அதன் அருகே நின்றுகொண்டிருந்த ஏராளமான சிறுமிகள் மீது தீ பரவியுள்ளது. இதில் 25 சிறுமிகள் காயமடைந்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக மெஹுசான மருத்துவமனைக்கு சிறுமிகள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது போன்று ஹீலியம் பலூன்களை கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் என தீயணைப்பு துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories