இந்தியா

பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?

பண்ணை வீட்டில் நடைபெறும் பார்ட்டிகளில் போதைக்காக பாம்பு விஷத்தை பயன்படுத்துவதாக சிக்கலில் சிக்கிய பிரபல Youtuber-ஐ நொய்டா போலீசார் விடுவித்துள்ளனர்.

பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியில் பிரபல Youtuber ஆக திகழ்பவர் எல்விஷ் யாதவ் (Elvish Yadav). இதன் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் ஓடிடி 2-வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதோடு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் வெற்றியாளராகவும் ஆனார். இந்த சூழலில் இவர் பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் தனியார் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. இந்த பார்ட்டியில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தப்படுவதாக பாஜக எம்.பி மேனகா காந்தியின் தொண்டு நிறுவனமான, பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (People For Animals) என்ற பிராணிகள் நலன் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் கொடுத்தது.

அதோடு அந்த பார்ட்டியின்போது வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாம்பு விஷத்தை அருந்தச் செய்ததுடன் விதவிதமான போதைப் பொருட்களையும் உட்கொள்ளச் செய்ததாகவும் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மேலும், பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 5 ராஜநாக வகை பாம்புகள், ஒரு இரட்டை தலை பாம்பு, ஒரு மலை பாம்பு என மொத்தம் 9 பாம்புகள் மற்றும் 25 மில்லி தடைசெய்யப்பட்ட பாம்பு விஷம் உள்ளிட்டவையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Youtuber எல்விஷ் யாதவ் பெயரை கூறினர். மேலும் எல்விஷ் யாதவ் நடத்தும் இதுபோன்ற பார்ட்டிகளுக்கு பாம்புகளையும், பாம்பு விஷங்களையும் வழங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து எல்விஷ் உட்பட 6 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் 9, 39, 49, 50, 51 மற்றும் ஐ.பி.சி பிரிவு 120 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து எல்விஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கும் இந்த இதற்கும் எந்த சம்மந்தமில்லை என்றும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டினை முன்வைத்து தனது பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் எல்விஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?

இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக எம்.பி மேனகா காந்தி, எல்விஷ் யாதவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் எல்விஷ் யாதவ், பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பாஜக கொடி வைத்த காரில் வந்து இறங்கியது குறித்த புகைப்படமும், பிக்பாஸில் இருந்த இவருக்கு ஆதரவாக பாஜகவினர் ஓட்டு கேட்டது குறித்த செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இவர் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பாஜக ஆளும் அரியான மாநில முதலமைச்சர் மனோகர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைர்லாகி பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த எல்விஷ் யாதவை நேற்று இரவு, ராஜஸ்தான் கோட்டா போலீசார் கைது செய்தனர். அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது எல்விஷ் யாதவ் பிடிபட்டார். தொடர்ந்து கோட்டா போலீசார், நொய்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது இந்த வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும், அவர் தற்போது தேடப்படும் குற்றவாளி அல்ல என்றும் நொய்டா போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எல்விஷ் யாதவை கோட்டா போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories