இந்தியா

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளரை திட்டமிட்டு துன்புறுத்திய போலிஸ் தம்பதி ! நடந்தது என்ன ?

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளரை திட்டமிட்டு துன்புறுத்திய போலிஸ் தம்பதி ! நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் இப்தார் அகமத் என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் சகுந்தலா என்பவரம் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தருணத்தில் காவல் ஆய்வாளர் இப்தார் அகமத் பெண் காவலர் சகுந்தலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சகுந்தலா மறுத்து வந்தாலும் காவல் ஆய்வாளர் இப்தார் அகமத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாத சகுந்தலா வேறொரு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்யும் தனது கணவர் ஜெகதீஷ் என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் காவல் ஆய்வாளர் இப்தார் அகமத்தை தனியாக வரவழைத்துள்ளார்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளரை திட்டமிட்டு துன்புறுத்திய போலிஸ் தம்பதி ! நடந்தது என்ன ?

அதன்படி தனது காரில் வந்த காவல் ஆய்வாளர் இப்தார் அகமத்தை தனது மனைவி சகுந்தலாவின் உதவியோடு கட்டிப்போட்ட ஜெகதீஷ் அவரின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு நிற்காத அவர், இப்தார் அகமத்தின் ஆணுறுப்பையும் அறுத்து அந்த இடத்தில் இருந்து தப்பியுள்ளார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த இப்தார் அகமத்தை கண்ட அந்த பகுதியை சேர்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் காவலர்கள் ஜெகதீஷ், சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories