இந்தியா

”உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது” - ஆந்திராவில் தீண்டாமை : தாசில்தார் செய்த நெத்தியடி சம்பவம்!

உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது என பட்டியலின இளைஞர்களை முடிதிருத்தும் கடையிலிருந்து வெளியேற்றிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது” - ஆந்திராவில்  தீண்டாமை : தாசில்தார் செய்த நெத்தியடி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் அருகே நெல்லிப்பட்லா என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் சிறிய முடி திருத்தக் கடைக்குப் பட்டியலின சமுகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த கடையின் உரிமையாளர், "உங்களுக்கு எல்லாம் இங்க முடி வெட்ட முடியாது" என கூறி அவர்களிடம் தீண்டாமையை கடைப்பிடித்துள்ளார்.

பிறகு இந்த தீண்டாமை குறித்து தாசில்தார் மனோஜ் குமார் அவர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து தாசில்தார் காவல்துறையுடன் அக்கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார்.

”உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது” - ஆந்திராவில்  தீண்டாமை : தாசில்தார் செய்த நெத்தியடி சம்பவம்!

இதையடுத்து கிராம மக்களிடையே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய தாசில்தார்,"தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் இருக்கிறது. இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் கூறமுடியாது.

தீண்டாமை ஒரு கொடுமையான செயல். தீண்டாமை செயலில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். தீண்டாமையைத் தவிர்த்து ஒற்றுமையுடன் வசிக்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

பின்னர், பட்டியலின இளைஞர்களை அதே சலூன் கடைக்கு அழைத்துச் சென்று முடி திருத்தம் செய்ய வைத்துள்ளார். தாசில்தாரின் இந்த செயலுக்குப் பட்டியலின மக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories