இந்தியா

கடனை திரும்ப கொடுக்காத கணவர்: மனைவியை கடத்தி தாக்கிய கும்பல்- ரூ.7 ஆயிரத்துக்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கணவர் கடனை திரும்ப கொடுக்காததால் அவரின் மனைவியை கடத்தி தாக்கிய கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

கடனை திரும்ப கொடுக்காத கணவர்: மனைவியை கடத்தி தாக்கிய கும்பல்- ரூ.7 ஆயிரத்துக்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பை அருகே 32 வயதுடைய இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இவரின் கணவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.7 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் அதனை திரும்பக்கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து கடனை கொடுத்த கும்பல் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரோடு அந்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளது. அந்த அந்த நபரின் மனைவி மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் அவரின் கணவர் வாங்கிய பணத்தை அந்த கும்பல் கேட்டுள்ளது.

ஆனால், அவரிடம் பணம் இல்லாத நிலையில், அந்த கும்பல் அந்த பெண்ணைட் தாங்கல் வந்திருந்த காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளது. அங்கு அந்த பெண்ணை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்த கணவர், தனது மனைவிக்கு நேர்ந்த கொடுமை அறிந்து தான் கடன் வாங்கிய நபரை தொடர்ப்பு கொண்டு பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார்.

கடனை திரும்ப கொடுக்காத கணவர்: மனைவியை கடத்தி தாக்கிய கும்பல்- ரூ.7 ஆயிரத்துக்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அதன்படி, தெரிந்த நபர்களிடம் பணத்தை வாங்கி அந்த நபரிடம் கொடுத்து தனது மனைவியை அழைத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்துறையில் அந்த நபர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், சபா மற்றும் அஃப்ரீன் ஆகிய இரு பெண்களும், அர்பாஸ், இம்ரான் ஆகியோரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களை 6 பிரிவுகளின் கீழ் கைது செய்த போலிசார் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories