இந்தியா

ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம் !

இந்தியாவுக்கு சுற்றி பார்க்க வந்த ரஷ்ய பெண்ணிடம், இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேசி அத்துமீறிய சம்பவம் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ எடுத்தோ தங்களது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இந்தியாவில் சில நேரங்களில் அத்துமீறல்கள் நிகழ்கிறது. இந்த நிகழ்வால் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், தற்போதும் ஒரு நிகழ்வு தலைநகர் டெல்லியில் அரங்கேறி அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம் !

ரஷ்யாவைச் சேர்ந்த Koko என்ற இளம்பெண் இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் 'Koko in India' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் பல ஊர்களுக்கும், பகுதிகளுக்கும் சென்று தனது சேனலில் பதிவேற்றி வருவார். இவரது சேனலுக்கு என்று தனி பார்வையாளர்களும் உள்ளனர். இந்த சூழலில் சம்பவத்தன்று இவர் டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே இரவு நேரத்தில் வீடியோ எடுத்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் இவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை தவிர்த்து வந்த நிலையிலும், இந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே பின் தொடர்ந்துள்ளார். அப்போது அந்த இளைஞர், தாம் நண்பர்களாக இருக்கலாமா என்று அவர் கேட்க, உடனே இந்த பெண்ணும் வேண்டாம் என்று கூறி நகர்ந்துகொண்டே இருந்தார்.

ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம் !

இருப்பினும் விடாத அந்த இளைஞர், தாம் பழகி பார்க்கலாம் என்றும், நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக (செக்சியாக) இருக்கிறீர்கள் என்றும் ஆபாசமாக பேசினார். இதற்கு அந்த பெண் கிளம்புகிறேன் என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதைத்தொடர்ந்து இதனை தனது சேனலில் அந்த பெண் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அந்த இளைஞர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ரஷ்ய இளம்பெண்ணிடம், இளைஞர் அத்துமீறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எனினும் அந்த பெண் இதுகுறித்து புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை, தென் கொரிய
மும்பை, தென் கொரிய

இதே போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மும்பை நகரில் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த தென் கொரிய பெண்ணை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து பேசியதுடன் முத்தமிட முயன்ற சம்பவமும் அரங்கேறியது. மேலும் தனது நண்பர்கள் மூலம் பைக்கில் பின் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஈடுபட்டார்.

இதனை அந்த பெண்ணே தனது youtube பக்கத்தில் லைவாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர், அவரை உடனே விரைந்து வந்து காப்பாற்றினார். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் டெல்லியில் ஹோலி பண்டிகையின்போது சிறுவர் உட்பட 3 பேர் ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவமும் நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories