இந்தியா

“என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !

தென் கொரிய பெண் யூடியூபர் ஒருவர் இந்தியாவை சுற்றி பார்த்து லைவ் செய்துகொண்டிருக்கையில், மும்பை இளைஞர்கள் இரண்டு பேர் அத்துமீற முயன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

“என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ எடுத்தோ தங்களது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவுக்கு தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஹியாஜியாங் பார்க் என்பவர் சுற்றுலா வந்துள்ளார். அப்போது மும்பையில் சாலையில் சென்றுகொண்டே அங்கிருப்பவை பற்றி தனது Youtube சேனலுக்கு லைவில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு சாலையோரம் அதிகமான பொதுமக்கள் சென்றுகொண்டிருந்தனர்.

“என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் இந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து, உன்னுடைய வயது என்ன?' என்று கேட்டார். மேலும் அந்த பெண்ணை முத்தமிடவும் முயன்றுள்ளார். பின்னர் அவரது கையைப் பிடித்து இழுத்து 'என்னுடன் பைக்கில் வா' என்று கூப்பிட்டுள்ளார். அந்தப் பெண் `முடியாது முடியாது 'என்று கூறுகிறார். பின்னர் அந்தப் பெண் அங்கிருந்து சென்றுள்ளார்.

இருப்பினும் விடாத அந்த இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் அந்த பெண்ணை பின் தொடர்ந்து லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார். அப்போது அவர் தனக்கு லிப்ட் எதுவும் வேண்டாம் என்று கூறி அங்கிருந்து நகர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண், "இது போன்ற நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

“என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !

இந்த வீடியோவை கண்ட பலரும் இதனை பகிர்ந்து மும்பை போலீசை டேக் செய்து ஒரு சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவர்களால் இந்தியாவின் மானம் தான் போகிறது என்றும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அத்துமீறலில் ஈடுப்பட்ட மொபீன் சந்த் மொகமத், மொகமத் சஹீப் என்ற 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

“என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !

இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "இந்தியாவில் எனக்கு நடந்த அத்துமீறல் போல் பிற நாடுகளிலும் எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் என்னால் போலீஸ் புகார் அளிக்க முடியவில்லை. இந்தியாவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த ஒரு மோசமான சம்பவம், இந்தியாவில் என் பயணத்தை முடிவுக்கு கொண்டுவர நான் அனுமதிக்க மாட்டேன். அற்புதமான இந்தியாவை உலகுக்கு காட்டும் என்னுடைய பயணம் தொடரும்." என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் அரங்கேறிக்கொண்டிருக்கையில், வேறொரு இளைஞர் அங்கு வந்து தென் கொரிய பெண்ணை காப்பாற்றினார். மேலும் தான் இந்த லைவை பார்த்து தான் இந்த இடத்திற்கு தங்களை காப்பற்ற வந்ததாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories