இந்தியா

பிறந்த 5 நாளிலேயே மூளைச்சாவு அடைந்த குழந்தை : உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்!

பிறந்த 5 நாளிலேயே மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உறுப்புகள் மூன்று குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது.

பிறந்த 5 நாளிலேயே மூளைச்சாவு அடைந்த குழந்தை : உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் சங்கனி. இவரது மனைவி சேத்னா. இந்த தம்பதிக்குக் கடந்த 13ம் தேதி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தை எவ்விதமான அசைவும் இல்லாமல் இருந்தது.

இதனால் குழந்தை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்குப் பரிசோதித்தபோது குழந்தை மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு தம்பதிகள் அதிர்ச்சியடைந்த கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர்.

பின்னர் மருத்துவர்கள் குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கினால் மூன்று குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பிறந்த 5 நாளிலேயே மூளைச்சாவு அடைந்த தனது குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கப் பெற்றோர் முன்வந்தனர்.

இதையடுத்து குழந்தையின் கல்லீரல் டெல்லியில் ஒன்பது மாத குழந்தைக்கு மாற்றப்பட்டது. மேலும் இரண்டு சிறுநீரகங்களும் 13 மற்றும் 15 வயது கொண்ட இரண்டு சிறுவர்களுக்கு பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறு வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories