விளையாட்டு

இறுதிகட்டத்தில் எகிறிய பரபரப்பு: சிக்ஸர் விளாசி சதமடித்த கோலி - வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி !

வங்கதேச அணிக்கு எதிராக உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிகட்டத்தில் எகிறிய பரபரப்பு: சிக்ஸர் விளாசி சதமடித்த கோலி - வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக ஆடிவரும் இந்திய அணி இன்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டான்ஸிட் ஹசன் , லிட்டன் தாஸ் ஆகியோர் சிறப்பாக தொடக்கத்தை வழங்கினர். 93 ரன்கள் குவித்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதிகட்டத்தில் எகிறிய பரபரப்பு: சிக்ஸர் விளாசி சதமடித்த கோலி - வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி !

இதனால், நல்ல தொடக்கத்தை பெற்ற வங்கதேச அணி இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தாகூர், குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 257 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, கில் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. ரோஹித் சர்மா 48 ரன்களுக்கும், கில் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, கே.எல்.ராகுல் இணை தங்கள் விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக ஆடினர். இறுதியில் விராட் கோலி சிக்ஸர் விளாசி சதம் விளாசியதோடு , அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் இந்திய அணி, 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

banner

Related Stories

Related Stories