இந்தியா

பரிசாக பெற்றோர் கொடுத்த கார்.. ஓட்டி செல்லும்போது நடந்த விபரீதம் : இரண்டு நண்பர்கள் பரிதாப பலி!

மகாராஷ்டிராவில் பெற்றோர்கள் பரிசாக வழங்கிய காரை ஒட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரிசாக பெற்றோர் கொடுத்த கார்.. ஓட்டி செல்லும்போது நடந்த விபரீதம் : இரண்டு நண்பர்கள் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர் - அம்பர்நாத் சாலையில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் காருக்குள் சிக்கி இருந்த இரண்டு இளைஞர்களை கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களைப் பரிசோதனை செய்தபோது இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர்களின் ஒருவரின் பெற்றோர் தனது மகனுக்குப் புதிதாக கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது நண்பனை அழைத்துக் கொண்டு புதிய காரை ஒட்டிப்பார்த்துள்ளார்.

அப்போதுதான் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories