இந்தியா

215 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா : அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸ்!

அதிவேகமாக கார் ஓட்டியதால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு போக்குவரத்து போலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

215 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா : அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டெக் அவுட் ஆனார். இது ரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளானது. பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் போட்டியில் சதம் அடித்தார். அடுத்து பாகிஸ்தான் போட்டியில் 63 பந்துகளில் 83 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார் ரோஹித் சர்மா.

இதையடுத்து இன்று புனேவில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது. இதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா மும்மை - புனே நெடுஞ்சாலையில் தனது காரில் 215 கி.மீ வேகத்தில் ஒட்டியுள்ளார். இதனை அறிந்த போக்குவரத்து போலிஸார் மூன்று அபராத ரசீதுகளை அவருக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories