இந்தியா

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு -  உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தையும் சேர்த்து அனுமதி வழங்க வேண்டும்என்றும் , திருமண அங்கீகாரம் இல்லாததால் அரசின் திட்டங்களைப் பெறுவது உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கபடுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில், சிறப்பு திருமண சட்டம் ரத்துசெய்யப்பட்டால் அதி நாட்டை சுதந்தரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு இழுத்துச் செல்லும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா இல்லையா என்பது நாடாளுமன்ற முடிவுக்கு உட்பட்டது என்றும், உச்ச நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க இயலாது. தன்பாலின திருமணத்தை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு -  உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?

ஒருவர் துணையைத் தேர்ந்தெடுப்பது அரசியல் சாசன பிரிவு 21 க்கு உட்பட்டது. என்றும், தன்பாலினத்தவர் தனது துணையைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. அவர்களுக்கான உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும்.இரண்டு திருநங்கையர் தங்களை திருநங்கையர் என்று அடையாளப் படுத்திக் கொண்டால், அவர்கள் திருமணத்தை சிறப்பு திருமணத்தின் கீழ் பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்றும் அரசுக்கு அறிவுரை வழங்கினர்.

தன்பாலினத்தவர்கள் மீது பாகுபாடு காட்டுவதை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை அரசு வழங்கி, இது குறித்த புகார்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு -  உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் என்ன ?

தன்பாலினத்தவர்கள் உரிமைகளை வழங்க ஒன்றிய அரசு அமைச்சரவை செயலாளர் தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஜாயிண்ட் வங்கி கணக்கு தொடங்குவது, மற்ற சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்தாலும், அவர்களுக்கு திருமண உரிமை வழங்க 5 நீதிபதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் இதற்கான குழுவை அமைத்து ஒன்றிய அரசு விரைவில் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரையோடு, இதற்கான உத்தரவையும் அரசுக்கு வழங்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories