இந்தியா

காதலியுடன் சொகுசு வாழ்க்கை : பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய பலே திருடன்.. தட்டி தூக்கிய போலீஸ்!

காதலியுடன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பூட்டியிருந்த வீட்டில் 2.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை திருடி சென்ற திருடனை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலியுடன் சொகுசு வாழ்க்கை : பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய பலே திருடன்.. தட்டி தூக்கிய போலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவில் வசித்து வருபவர் தயாளன் (40). நைஜிரியா நாட்டில் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணிப்புரிந்து வரும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 8 ஆம் தேதி விடுமுறைக்காக தயாளன், வெளிநாட்டில் இருந்து தனது குடும்பத்தை சந்திக்க புதுச்சேரி வந்துள்ளார்.

இதையடுத்து தனது உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்ட தயாளன், அதன்படி தனது குடும்பத்துடன் நேற்றைய முந்தினம் விழுப்புரம் சென்றிருந்தார். பின்னர் நேற்று பகல் நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, அவரது வீட்டின் ஜன்னல் அருக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் கலைக்கப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்து பீரோவின் உள்ளே பார்த்தபோது, அதில் இருந்த ரூ.40 ஆயிரம் பணம், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 4.5 சவரன் தங்க நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பதறிய தயாளன், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

காதலியுடன் சொகுசு வாழ்க்கை : பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய பலே திருடன்.. தட்டி தூக்கிய போலீஸ்!

அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகை பையில் தயாளன் மனைவியின் செல்போன் ஒன்று சைலெண்ட் மோடில் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து செல்போனின் சிக்னலை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அது சேலம் மேட்டூர் அருகே துண்டிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 1 கீ.மி தூரம் சுற்றி உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட பங்களா மற்றும் கட்டிடங்களை போலீசார் சோதனையிட்டனர்.

அந்த சமயத்தில் பயன்பாட்டில் இல்லாத கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான கட்டிடத்துக்குள் சென்று பார்த்தபோது, ஒரு பையுடன் ஒருவர் அசந்து தூங்கி கொண்டிருந்ததை போலிசார் கண்டனர். முதலில் பையை சோதனையிட்டதில் தயாளன் வீட்டில் திருடிய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தூங்கி கொண்டிருந்த நபரை விசாரணை மேற்கொண்டதில் அவர்தான் திருடன் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த ஸ்வரன் என்கிற கோடீஸ்வரன் (30) என்பதும், அவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவரும், பட்ட படிப்பு முடித்துள்ள இவரது காதலிகயும் வசதியாக வாழ இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

காதலியுடன் சொகுசு வாழ்க்கை : பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய பலே திருடன்.. தட்டி தூக்கிய போலீஸ்!

அதற்காக தயாளன் வீட்டை நோட்டமிட்டு, ட்ரிலிங் இயந்திரம் மூலமாக அவரது வீட்டின் ஜன்னலை துளையிட்டு திருடி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அவர் திருட்டு தொழில் செய்து வருவதும், இதுவரை அவர் மீது சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குற்றவாளி கோடீஸ்வரனை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 12 மணி நேரத்தில் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபரை துரிதமாக செயல்பட்டு பிடித்த கிழக்கு குற்ற பிரிவு போலீசார் மற்றும் காலாபட்டு போலீசாரை டிஐஜி பிரேஜேந்திர குமார் யாதவ் வெகுவாக பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories