இந்தியா

கேரளா: பேருந்தில் அத்துமீறல்- கூச்சலிட்ட இளம்பெண்: தப்பி ஓடிய மலையாள நடிகரை துரத்திப்பிடித்த பொதுமக்கள்!

பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய மலையாள நடிகர் பினு பி.கமாலை போலீசார் கைது செய்தனர்.

கேரளா: பேருந்தில் அத்துமீறல்- கூச்சலிட்ட இளம்பெண்: தப்பி ஓடிய மலையாள நடிகரை துரத்திப்பிடித்த பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்த பினு பி.கமால் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைசுவை நடிகராக வலம்வந்தவர். இவர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து தனது வீட்டுக்கு கேரள அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது இவரின் அருகில் 21 வயது இளம்பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் பினு கமால் அந்த இளம்பெண்னிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பினு கமாலின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். அதனைக் கேட்ட பயணிகள் பினு கமாலை பிடிக்க முயற்சித்த போது அவரின் பேருந்தில் இருந்து இறங்கி தப்பித்து ஓடியுள்ளார்.

கேரளா: பேருந்தில் அத்துமீறல்- கூச்சலிட்ட இளம்பெண்: தப்பி ஓடிய மலையாள நடிகரை துரத்திப்பிடித்த பொதுமக்கள்!

எனினும், அங்கிருந்தவர்கள் பினு கமாலை துரத்திப் பிடித்துள்ளனர். உடனடியாக இது குறித்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட அங்கு வந்த போலிஸார் பினு கமாலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories