
டெல்லி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றின் சக்கரத்தில் சடலம் ஒன்று இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அந்த சடலத்தை போலிஸார் மீட்டனர். பிறகு அடையாளம் தெரியாத அந்த சடலம் குறித்து விசாரித்தபோது, அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிஜோந்தர் என்பதும் டெல்லியில் கார் ஒட்டுநராக இருந்து வந்ததும் தெரியவந்தது.
இவர் எப்படி கார் சக்கரத்தில் சிக்கினார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம் பெண் ஒருவர் மீது கார் மோதி அவரது உடல் பல கி.மீ இழுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








