இந்தியா

”மாபியா போல் செயல்படும் மோடி அரசு” : CAG அதிகாரிகள் இடமாற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!

பா.ஜ.க அரசின் ஊழலை வெளிகொண்டுவந்த CAG அதிகாரிகள் இடமாற்றத்திற்குக் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

”மாபியா போல் செயல்படும் மோடி அரசு” : CAG அதிகாரிகள் இடமாற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து அந்த கட்சி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால், அது குறித்த விசாரணைக்குக் கூட உத்தரவிடாமல் பாஜக அரசு தனது ஊழல்களை அப்பட்டமாக மறைத்து வருகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அந்த கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களைத் தனது பக்கம் இழுத்து வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட ரபேல் விமான கொள்முதலில் ஊழல் நடந்ததாக பிரான்ஸ் அரசியல் கட்சிகள் முதல் இந்திய எதிர்க்கட்சிகள் வரை குற்றம் சாட்டின. ஆனால், இது குறித்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களால் கொள்முதல் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அந்த ஊழலை அப்படியே மூடி மறைத்தது பா.ஜ.க அரசு.

அண்மையில் பா.ஜ.க ஆட்சியில் 7.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டது. இது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க ஆட்சியில் ஊழலை வெளிக் கொண்டு வந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளது ஒன்றிய அரசு . இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்தும் எல்லோரையும் மிரட்டி அச்சுறுத்துவது பா.ஜ.கவின் தொடர் செயல்பாடாக உள்ளது. பா.ஜ.க அரசின் ஊழல்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை அச்சுறுத்தும் மாபியா போல மோடி அரசு செயல்படுகிறது. பா.ஜ.க அரசின் ஊழலை மறைப்பதற்காகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories