இந்தியா

நண்பர்களுடன் ஊர்வலத்தை காண சென்ற சிறுவன்.. ரீல்ஸ் செய்த ஆசைப்பட்ட போது இரயில் மோதி பலியான சோகம் !

ரீல்ஸ் செய்ய சென்ற சிறுவன், இரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நண்பர்களுடன் ஊர்வலத்தை காண சென்ற சிறுவன்.. ரீல்ஸ் செய்த ஆசைப்பட்ட போது இரயில் மோதி பலியான சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நவீன உலகில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய உபகரணங்களில் முக்கியமானவையாக மொபைல் போன்கள் உள்ளது. அதில் முக்கியமான ஆப்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. எப்போது இந்த மொபைல் போன்களில் செல்பி என்ற ஒன்று வந்ததோ, அப்போதில் இருந்து உயிரிழப்புகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணமாக காணப்படுகிறது.

அதோடு டிக் டாக் என்ற ஆப் மூலம் தங்கள் திறமைகளை உலகிற்கு காட்டலாம் என்று அநேகமானோர் பல விஷயங்களை செய்து வந்தனர். டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற ஒன்று வந்தது. தொடர்ந்து மக்கள் தற்போது அதனை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரீல்ஸ் மூலம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நண்பர்களுடன் ஊர்வலத்தை காண சென்ற சிறுவன்.. ரீல்ஸ் செய்த ஆசைப்பட்ட போது இரயில் மோதி பலியான சோகம் !

இதுவே சில நேரங்களில் அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறது. இவ்வாறு ரீல்ஸ் செய்யும்போது சில விபரீதங்கள் ஏற்பட்டு சில பேருக்கு உடல் உறுப்புகள் சேதமடைந்ததோடு, சில பேர்களுக்கு உயிரே பறிபோகும் நிலை உண்டாக்குகிறது. தற்போது இதுபோன்ற செயல்களுக்கு அனைவரும் அடிமையாகி விட்டனர் என்றே சொல்லலாம்.

சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் சிலர் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், உயரமான இடங்களில் நின்று செல்பி எடுப்பது, ஆபத்தான இடங்களில் இருந்து ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களை செய்கின்றனர். இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்கும்போது தண்டவாளம் அருகே நின்று இளைஞர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்.

நண்பர்களுடன் ஊர்வலத்தை காண சென்ற சிறுவன்.. ரீல்ஸ் செய்த ஆசைப்பட்ட போது இரயில் மோதி பலியான சோகம் !

அப்போது வந்த இரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் அமைந்துள்ள பாரபங்கி என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபர்மான் (14). இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருவார். இந்த சூழலில் சம்பவத்தன்று இவரும், இவரது நண்பர்களான ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோர் அருகில் ஒரு ஊர்வலத்தைக் காணச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள தண்டவாளத்தை கண்டதும் இவர் ரீல்ஸ் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அருகில் சென்று அவர் இரயில் தண்டவாளத்தின் அருகே சென்று நடக்கவே, பின்னால் இருந்து வேகமாக வந்த இரயில் அவர் மீது சட்டென்று மோதி, அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் சிறுவன் ஃபர்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories