இந்தியா

”அவனை தூக்கிலிடுங்கள்”.. உஜ்ஜைன் கொடூர சம்பவத்தின் குற்றவாளி கைது : தந்தை பேட்டி!

"எனது மகனை தூக்கிலிட வேண்டும்" என உஜ்ஜைன் கொடூர சம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் தந்தை பேட்டி கொடுத்துள்ளார்.

”அவனை தூக்கிலிடுங்கள்”.. உஜ்ஜைன் கொடூர சம்பவத்தின் குற்றவாளி கைது : தந்தை பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமி ரத்தக்கறையுடன் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்கும் வீடியோ அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலிஸார் விசாரணை செய்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்மாநில பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டினர். நாட்டையே இக்கொடூர சம்பவம் உலுக்கியதை அடுத்து போலிஸார் குற்றவாளியைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர்.

பின்னர் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, இதற்கு காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் பாரத் சோனி என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தனது மகனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளியின் தந்தை பேட்டிக்கொடுத்துள்ளார்.

இது குறித்துக் கூறிய அவர் இது, "வெட்கக்கேடான செயல். என் மகனைச் சந்திக்க நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்திற்கும் செல்ல மாட்டேன். என் மகன் ஒரு கொடூர குற்றத்தைச் செய்து விட்டான். அவனைத் தூக்கிலிட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories