இந்தியா

புதுமாப்பிள்ளை.. பணியாளர்களின் செல்போன்களை திருடிய செக்யூரிட்டி.. போலிசார் வலையில் சிக்கியது எப்படி ?

புதுமாப்பிள்ளை.. பணியாளர்களின் செல்போன்களை திருடிய செக்யூரிட்டி.. போலிசார் வலையில் சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி சேதாரப்பட்டு என்ற பகுதியில் ஜெனரல் வயர்ஸ் கேபிள் சிஸ்டம் என்ற தனியார் தொழிற்சாலை வருகிறது. இங்கு பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் மொபைல் போன்களை ஒரு அறையில் வைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

இதனை அங்கு பணிபுரிபவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவர்கள் வைத்து செல்லும் மொபைல் அறைக்கு செக்யூரிட்டி ஒருவரும் உள்ளார். அந்த வகையில் கடந்த 19ம் தேதி பணியாளர்கள் தங்கள் மொபைல் போன்களை செக்யூரிட்டியின் பாதுகாப்பில் வைத்து விட்டு பணிக்கு சென்றுள்ளனர். பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கம்போல் தங்கள் மொபைல் போன்களை எடுத்து செல்ல வந்துள்ளனர்.

புதுமாப்பிள்ளை.. பணியாளர்களின் செல்போன்களை திருடிய செக்யூரிட்டி.. போலிசார் வலையில் சிக்கியது எப்படி ?

அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்களில் 18 பேரின் மொபைல் போன்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து விசாரிக்க செக்யூரிட்டியை தேடியபோது, அவரும் காணாமல் போயுள்ளார். இதையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள், அலுவலகத்தின் மேலாளரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சேதராபட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த செக்யூரிட்டி திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் பாண்டியராஜன் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில் தீவிரமாகி இறங்கினர்.

புதுமாப்பிள்ளை.. பணியாளர்களின் செல்போன்களை திருடிய செக்யூரிட்டி.. போலிசார் வலையில் சிக்கியது எப்படி ?

தொடர்ந்து அவர் எடுத்து சென்ற பெண்களின் செல்போன் எண்ணை ட்ராக் செய்த போலீசார், திண்டிவனம் இரயில் நிலையத்தில் இரயிலுக்கு காத்துக்கொண்டிருந்த அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சென்னையில் திருடிய 5 போன்கள், தற்போது திருடப்பட்ட 18 போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பாண்டியராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிதாக திருமணமான பாண்டியராஜன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories