இந்தியா

டெல்லி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெருநாய்.. வீடியோவால் சிக்கிய தொண்டு நிறுவன பொதுச்செயலாளர் !

தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த தொண்டு நிறுவன பொதுச்செயலாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெருநாய்.. வீடியோவால் சிக்கிய தொண்டு நிறுவன பொதுச்செயலாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.

அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது டெல்லியில், ஒருவர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் 'நிஸ்கம் சேவா சமிதி' என்ற தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் பொதுச்செயலாளராக பவன் மல்ஹோத்ரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெருநாய்.. வீடியோவால் சிக்கிய தொண்டு நிறுவன பொதுச்செயலாளர் !

இவர் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தெருநாய்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது குறித்து அவரின் வீட்டாரிடம் சிலர் புகார் அளித்த நிலையிலும், அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த சூழலில் அவர் ஒரு தெருநாயை வன்கொடுமை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், தொண்டு நிறுவனம் ஒன்றின் பொதுச்செயலாளர் என்பதால் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

எனினும் இந்த விவகாரம் உயரதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், பவன் மல்ஹோத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories