இந்தியா

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது.. கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை மிரட்டல்!

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துள்ள தண்ணீரை நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை மிரட்டல் விடுத்துள்ளார்.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது..  கர்நாடக அரசுக்கு பசவராஜ் பொம்மை மிரட்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரியில் கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்து விடாத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு தண்ணீரைப் பெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பா.ஜ.க, தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நிற்காமல், கட்சி நலன் சார்ந்து மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் தரக் கூடாது என்றும், தற்போது திறந்து விடப்பட்டு வரும் தண்ணீரையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநில பா.ஜ.க, அம்மாநில அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

"தண்ணீர் திறப்பைத் தொடர்ந்தால் போராட்ட நடைபயணம் நடத்தப்படும்" என்று பா.ஜ.கவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் கர்நாடக மாநில பா.ஜ.க செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கும் தமிழ்நாடு பா.ஜ.கவுக்கும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories