இந்தியா

பாலில் விஷம்.. சித்தி செய்த கொடூர செயலால் பறிபோன பச்சிளம் குழந்தை உயிர்.. அதிர்ச்சியின் பின்னணி என்ன?

சொத்தில் பங்கு போய் விடுமோ என்ற பயத்தில் 5 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த சித்தியின் செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலில் விஷம்.. சித்தி செய்த கொடூர செயலால் பறிபோன பச்சிளம் குழந்தை உயிர்.. அதிர்ச்சியின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் யாதகிரி என்ற பகுதியில் அமைந்துள்ளது பபலா என்ற கிராமம். இங்கு சித்தப்பா என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீ தேவி என்ற மனைவி இருக்கும் நிலையில், இந்த தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. அப்போது இவர்களுக்கு 3 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால், சித்தப்பாவுக்கு தேவம்மா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன்னர் 2-வது திருமணம் நடந்துள்ளது.

தனக்கு குழந்தை இல்லாததால், தனது கணவர் 2-ம் திருமணம் செய்துகொண்ட விரக்தியில் கணவருடன் சண்டையிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார் முதல் மனைவி ஸ்ரீ தேவி. பலமுறை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானமாகவில்லை. இந்த சமயத்தில் சித்தப்பாவுக்கும் அவரது 2-வது மனைவி தேவம்மாவுக்கும் 4 குழந்தைகள் பிறந்திருந்தது.

பாலில் விஷம்.. சித்தி செய்த கொடூர செயலால் பறிபோன பச்சிளம் குழந்தை உயிர்.. அதிர்ச்சியின் பின்னணி என்ன?

இந்த சமயத்தில் ஸ்ரீ தேவியை சமாதானம் செய்து மீண்டும் அவரது குடும்பத்தால் கணவர் சித்தப்பாவுடன் சேர்த்து வைத்தனர். இதையடுத்து சித்தப்பா, ஸ்ரீ தேவி, தேவம்மா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் முதல் மனைவி ஸ்ரீ தேவி திடீரென கற்பமுற்றாள். நீண்ட வருடங்களுக்கு பிறகு கர்ப்பமுற்றதால் குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது.

இதையடுத்து ஸ்ரீ தேவிக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அனைவரும் வளர்த்து வந்த நிலையில், திடீரென கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அந்த குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

பாலில் விஷம்.. சித்தி செய்த கொடூர செயலால் பறிபோன பச்சிளம் குழந்தை உயிர்.. அதிர்ச்சியின் பின்னணி என்ன?

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் குழந்தையின் சித்தியான தேவம்மா மீது போலீசுக்கு சந்தேகம் திரும்பியது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்ட்ட கிடுகுக்குப்பிடி விசாரணையில் குழந்தையை தான்தான் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் தனக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில், 5-வது குழந்தைக்கு சொத்தில் பங்கு கொடுத்தால் தனது பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்பதால் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்தில் பங்கு போய் விடுமோ என்ற பயத்தில் 5 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த சித்தியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories