இந்தியா

காசு கேட்டதால் ஆத்திரம்.. பா.ஜ.க நிர்வாகியை செருப்பால் அடித்த அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள்!

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகியை அக்கட்சி தொண்டர்கள் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசு கேட்டதால் ஆத்திரம்.. பா.ஜ.க நிர்வாகியை செருப்பால் அடித்த அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவராக இருப்பவர் பல்லவ் போர்வால். இவர் மஹித்பூர் பகுதியில் சொந்தமாகக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அதேபோல் கனகோடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜீவன், ஜிதேந்திர சிங். இவர்கள் இருவரும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் ஜீவன், ஜிதேந்திர சிங் ஆகிய இருவரும் பல்லவ் போர்வால் நடத்தி வரும் கடைக்கு வந்துள்ளனர். அப்போது இவர்கள் பேசிக்குக் கொண்டிருந்த போது திடீரென பிரச்சனை எழுந்துள்ளது.

முதலில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஜீவனும், ஜிதேந்திர சிங்கும் தாங்கள் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி பல்லவ் போர்வாலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

காசு கேட்டதால் ஆத்திரம்.. பா.ஜ.க நிர்வாகியை செருப்பால் அடித்த அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள்!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்வான வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலானது. பின்னர் போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மஹித்பூரில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக ஜிதேந்திர சிங்கிற்கு சொந்தமான ஜேசிபி எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்லவ் போர்வால் ஜிதேந்திர சிங்கிடம் கமிஷன் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை செருப்பால் அடித்தது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories