இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ஷாக்கான மணமகன்: நடந்தது என்ன?

பெங்களூருவில் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ஷாக்கான மணமகன்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி இருவீட்டாரும் முடிவு செய்திருந்த கடந்த சனிக்கிழமையன்று கோலாலா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

இரு குடும்பத்தின் உறவினர்களும் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துவதற்காக அமர்ந்திருந்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த மணப்பெண் திவ்யா திடீரென எழுந்து நின்று இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

இதைக்கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது தாலி கட்டும் நேரத்தில் ஏன் பிரச்சனை செய்கிறாய் என அவரது பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் கேட்டுள்ளனர்.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ஷாக்கான மணமகன்: நடந்தது என்ன?

இதற்கு அவர் மண்டபத்திலிருந்த ஒரு வாலிபரைக் காட்டி இவரைத் தான் நான் காதலிப்பதாகக் கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மணப்பெண்ணின் பெற்றோர் எவ்வளவு பேசியும் அவர் சமாதானம் அடையவில்லை.

இதனால் என்ன செய்து என்று தெரியாமல் இருந்த மணமகனின் பெற்றோர் இப்பிரச்சனையைக் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். போலிஸார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போதும் மணப்பெண் காதலித்தவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ஷாக்கான மணமகன்: நடந்தது என்ன?

இதனால் போலிஸார் திவ்யாவின் காதலன் நாகேஷை வரவழைத்துப் பேசினர். அப்போது அவரும் திவ்யாவைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என போலிஸார் இரு வீட்டாரிடமும் தெரிவித்தனர்.

இதனிடையே மணமகன் வெங்கடேசன் குடும்பத்தார் தாங்கள் பல லட்சம் செலவு செய்த இந்த திருமணம் ஏற்பாடு செய்ததாகவும், உறவினர்கள் முன்னிலையில் திவ்யா தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் முறையிட்டனர். பின்னர் திவ்யாவின் குடும்பத்தார் திருமணத்திற்கு ஆன செலவுக்கான பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஏமாற்றத்துடன் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினார்.

banner

Related Stories

Related Stories