இந்தியா

” இன்று நான் அதானியைப் பற்றி பேச மாட்டேன் ”.. மக்களவையில் பா.ஜ.கவை அலறவிட்ட ராகுல் காந்தி!

மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்குச் சமம் என ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசியுள்ளார்.

” இன்று நான் அதானியைப் பற்றி பேச மாட்டேன் ”.. மக்களவையில் பா.ஜ.கவை அலறவிட்ட ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி இன்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளும் விவாதம் நடைபெற்று வருகிறது.

” இன்று நான் அதானியைப் பற்றி பேச மாட்டேன் ”.. மக்களவையில் பா.ஜ.கவை அலறவிட்ட ராகுல் காந்தி!

இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் போது பா.ஜ.கவினர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி, "பா.ஜ.கவினர் பயப்படத் தேவையில்லை. இன்று நான் அதானியைப் பற்றிப் பேச மாட்டேன். எனவே பா.ஜ.கவினர் அஞ்ச வேண்டாம்" என தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, உண்மையான இந்தியாவை எனது ஒற்றுமை நடைபயணத்தில் பார்த்தேன். அப்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்தேன். பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நான் நேரில் சந்தித்தேன். மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைவரின் கதைகளும் கொடூரமாக உள்ளது. ஆனால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட மோடி இன்னும் பேசவில்லை.

” இன்று நான் அதானியைப் பற்றி பேச மாட்டேன் ”.. மக்களவையில் பா.ஜ.கவை அலறவிட்ட ராகுல் காந்தி!

பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை. ஆனால் நான் சென்றேன். மகனின் சடலத்துடன் அமர்ந்திருந்த தாயைச் சந்தித்தேன். பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசினேன். பிரதமரைப் பொறுத்தவரை இந்தியாவில் மணிப்பூரில் இல்லை. நான் அதை மணிப்பூர் என குறிப்பிடுகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் அங்கு மணிப்பூர் இல்லை. பாஜக மணிப்பூரை இரண்டாகப் பிரித்துவிட்டது.

மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்குச் சமம். நினைத்துப் பார்க்கவே அஞ்சும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றதாக முகாம்களில் உள்ள பெண்கள் தெரிவித்தனர். இந்தியாவை கொன்றதைப் போல, மணிப்பூரில் பாரத மாதாவையும் கொன்றுவீட்டீர்கள்" என ஆவேசமாகப் பேசினார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசும் போது தொடர்ந்து பா.ஜ.கவினர் அவரை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories