இந்தியா

மணிப்பூரை இரண்டாக பிரித்து விட்ட பாஜக.. மக்களவையில் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

மக்களவையில் இந்திய கூட்டணி எம்.பிக்கள் கொண்டு வந்த ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.

மணிப்பூரை இரண்டாக பிரித்து விட்ட பாஜக.. மக்களவையில் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

மணிப்பூரை இரண்டாக பிரித்து விட்ட பாஜக.. மக்களவையில் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

இதன்படி இன்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. இந்த விவாதத்தைக் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு பா.ஜ.கவினர் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பேசினார். அப்போது பேசிய அவர், "மணிப்பூரில் பா.ஜ.கவின் இரட்டை எஞ்சின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மௌனவிரதத்தைத் தொடர்வது ஏன்?

மணிப்பூர் முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்காதது ஏன்?. மூச்சுக்கு மூச்சு ஒரே இந்தியா என முழங்கி வரும் பிரதமர் மோடி மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டார்.

மணிப்பூரை இரண்டாக பிரித்து விட்ட பாஜக.. மக்களவையில் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

பிரதமர் மோடியிடம் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதல் கேள்வி 3 மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது. இன்னும் ஏன் பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலம் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை? 80 நாட்களாகப் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காதது ஏன்?. மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இந்த முக்கியமான விவாதத்தில் கூட பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories