இந்தியா

தலையில் தடவிய எண்ணெய்.. கையோடு கொத்து கொத்தாக வந்த முடி: பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ஹைதராபாத்தில் பியூட்டி பார்லரில் தலையில் தடவிய எண்ணெய் காரணமாகப் பெண் ஒருவருக்குத் தலைமுடி கையோடு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் தடவிய எண்ணெய்.. கையோடு கொத்து கொத்தாக வந்த முடி: பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்களை அழகாகவும், அழகுபடுத்தவும் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். இதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஃபேஷியல், ஹேர் கட்டிங், ஃபேஸ் பேக் செய்து கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் பியூட்டி பார்லர்களில் தரமான பொருட்கள் பயன்படுத்தாத காரணமாக பெண்கள் பலருக்கும் முடி கொட்டுவது மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு உடல் உபாதை சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

தலையில் தடவிய எண்ணெய்.. கையோடு கொத்து கொத்தாக வந்த முடி: பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் அவரது முடியை வெட்டுவதற்காகத் தலையில் எண்ணைத் தடவியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே தலையில் கைவைத்தபோது முடி கொத்து கொத்தாக கையோடு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் பியூட்டி பார்லர் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பியூட்டி பார்லர் மூடவேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories