இந்தியா

2024ல் நீங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம்: மக்களவையில் பாஜகவினர் முன் அடித்துச் சொன்ன திமுக MP!

மக்களவை துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2024ல் நீங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம்: மக்களவையில் பாஜகவினர் முன் அடித்துச் சொன்ன திமுக MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்திய கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளனர்.

2024ல் நீங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம்: மக்களவையில் பாஜகவினர் முன் அடித்துச் சொன்ன திமுக MP!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு விவாதம் எதுவும் நடத்தாமல் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து வருகிறது.

அந்தவகையில் இன்று மக்களவையில் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்மசோதா மீது பேசிய தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன்,"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிப்பது ஜனநாயக விரோதச் செயல். டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

2024ல் நீங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம்: மக்களவையில் பாஜகவினர் முன் அடித்துச் சொன்ன திமுக MP!

காவல்துறை, பொது அமைதி மற்றும் நிலம் தவிர்த்து அனைத்து அதிகாரங்களும் டெல்லி மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினர், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஈ.டி.-யை அனுப்புவது, சிபிஐ.யை அனுப்புவது, இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உங்கள் பக்கம் (பா.ஜ.க.) இழுக்க முயற்சி செய்கிறீர்கள்.

9 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பா.ஜ.க தவறாக வழிநடத்துகிறது. 2024ல் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள்" என ஆவேசமாகக் கூறினார்.

மக்களவையில் தி.மு.க உறுப்பினர் தயாநிதி மாறன் தொடர்ந்து பேசிய போது, பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அவரை பேச விடாமல் பா.ஜ.க.வினர் தடுப்பதற்கு, நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

banner

Related Stories

Related Stories