இந்தியா

சமூக வலைதளம் மூலம் பழக்கம்.. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நடன ஆசிரியர் !

சமூக வலைதளம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை மிரட்டி நடன ஆசிரியர் ஒருவர் தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளம் மூலம் பழக்கம்.. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நடன ஆசிரியர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஆண்டி ஜார்ஜ். தனியார் பள்ளி ஒன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சமூக வலைதளம் மூலம் இளம்பெண் ஒருவரது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர்.

அப்படியே இருவரும் நெருங்கி பழகிய நிலையில், இளம்பெண்ணின் புகைப்படங்கள் உள்ளிட்டவையை ஆண்டி ஜார்ஜ் சேகரித்து வைத்துக்கொண்டார். இதனை பயன்படுத்தி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் விலகி செல்லவே, விடாமல் ஆண்டி ஜார்ஜ் அவரது அந்தரங்க புகைப்படங்களை அவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் பழக்கம்.. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நடன ஆசிரியர் !

தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி இந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதனையும் வீடியோ எடுத்து வைத்த அந்த ஆசிரியர் தொடர்ந்து மிரட்டி தனது பாலியல் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இது ஒரு முறை எல்லை தாண்டி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து இளம்பெண்ணை மிரட்டி வலுக்கட்டாய படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் பழக்கம்.. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நடன ஆசிரியர் !

மேலும் அத்தனையும் வீடியோ எடுத்து வைத்த அவர்கள், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் மிகவும் மன உளைச்சலான பாதிக்கப்பட்ட இளம்பெண், உடனே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக நடன ஆசிரியர் ஆண்டி ஜார்ஜ், மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ், சசி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப், பென் ட்ரைவ் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைதளம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை மிரட்டி நடன ஆசிரியர் ஒருவர் தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories