இந்தியா

“நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்..” - மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்: இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்..” - மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்: இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் அடூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் அஃப்சானா - நௌஷாத் தம்பதியினர். கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் நௌஷாத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நௌஷாத் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் நௌஷாத்தின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நௌஷாத்த்தின் குடும்பத்தார், அவரது மனைவி என அனைவரிடமும் விசாரித்தனர்.

“நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்..” - மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்: இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

அதோடு அவர் வேலை செய்யும் இடம், அந்த பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் என தொடர்ந்து விசாரித்து வந்தனர். செல்போன் எண்ணை வைத்தும் வழக்கை விசாரித்தனர். எனினும் அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. இதையடுத்து நௌஷாத்தின் மனைவியிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான் தனது கணவனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தனது கணவனை துண்டு துண்டாக வீட்டில் தனித்தனி இடங்களில் புதைத்து விட்டதாகவும், அவரது உடலை எரித்து ஆற்றில் சாம்பலை கரைத்து விட்டதாகவும், வீட்டுக்கு பின்புறம் அடக்கம் செய்திருப்பதாகவும் மாறி மாறி போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவர் கூறிய இடங்களில் எல்லாம் தோண்டி சடலத்தை தேடினர். எனினும் சடலம் கிடைக்கவில்லை.

“நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்..” - மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்: இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

இதனால் அவரிடம் மேலும் விசாரிக்கையில், மாபெரும் ட்விஸ்ட்டாக கொலை செய்துவிட்டதாக கூறிய கணவர் நௌஷாத் திடீரென உயிருடன் முழு உருவமாக வந்து நின்றுள்ளார். இதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நௌஷாத்திடம் விசாரிக்கையில், தனது நண்பர் ஒருவர் மூலம் இந்த விவகாரத்தை அறிந்துகொண்டதாகவும், தனது மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு தான் சென்றதாகவும், தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரிக்கையில், தனது மனைவி தன்னுடன் சண்டையிடுவது மட்டுமின்றி தன்னை தினமும் தாக்கியதாகவும், என்றாவது ஒருநாள் தன்னை கொலை செய்துவிடுவார் என்ற பயத்திலும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதாக கூறினார். மேலும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மொபைல் போன் கூட வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories