இந்தியா

“+2-வில் இத்தனை மார்க் எடுத்திருந்தா தான் வீடு..” உரிமையாளர் போட்ட விநோத நிபந்தனையால் ஆடிப்போன நபர் !

12-ம் வகுப்பில் 90% மார்க் இருந்தால் தான் தனது வீட்டை வாடகைக்கு கொடுப்பதாக பெங்களுருவில் வீட்டின் உரிமையாளர் வைத்த விநோத நிபந்தனை குறித்த செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

“+2-வில் இத்தனை மார்க் எடுத்திருந்தா தான் வீடு..” உரிமையாளர் போட்ட விநோத நிபந்தனையால் ஆடிப்போன நபர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நகரங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வேலைக்கு மக்கள் செல்வது வழக்கம். அது கூலி தொழில் தொடங்கி, IT வேலை வரையிலும் பொதுமக்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்துக்கு செல்வர். சிலர் தங்களது குடும்பத்தோடும் குடிபெயர்வர்.

அவ்வாறு செல்பவர்களில் சிலர் ஹாஸ்டல் உள்ளிட்டவை பார்த்தாலும், அண்மை காலமாக வீடு எடுத்து தங்க பெரும்பாலானோர் விருப்பப்படுகின்றனர். அவர்கள் வாடகைக்கு வீடு தேடுகையில், வீட்டின் உரிமையாளர் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பர். ஆனால் இங்கு ஒருவரோ, வித்தியாசமான நிபந்தனை விதித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

“+2-வில் இத்தனை மார்க் எடுத்திருந்தா தான் வீடு..” உரிமையாளர் போட்ட விநோத நிபந்தனையால் ஆடிப்போன நபர் !

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஆரின் வெர்மா (Arin Verma) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தரகர் மூலம் வீடு தேடி வந்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர், வாடகைக்கு வருபவர்களின் விவரங்களை தராகரிடம் கேட்டுள்ளார். மேலும் அவரது 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், பான் கார்டு, லிங்கேடின் அல்லது ட்விட்டர் கணக்கு உள்ளிட்டவையை கேட்டுள்ளார்.

“+2-வில் இத்தனை மார்க் எடுத்திருந்தா தான் வீடு..” உரிமையாளர் போட்ட விநோத நிபந்தனையால் ஆடிப்போன நபர் !

அதுமட்டுமின்றி, அவரை பற்றி 150-200 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத சொல்லி அனுப்ப சொல்லியுள்ளார். இவையனைத்தையும் ஆரின் வெர்மா செய்துள்ளார். இருப்பினும் அவருக்கு வீடு தர முடியாது என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். ஏனெனில், ஆரின் வெர்மா 12-ம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பதால்.

மேலும் வீட்டின் உரிமையாளர் தனது 12-ம் வகுப்பில் 75% எடுத்ததால், வீட்டுக்கு வாடகைக்கு வருபவர் குறைந்தது 90% மதிப்பெண்களாவது எடுத்திருக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். இந்த வேடிக்கையான நிபந்தனையை ஆரின் வெர்மா தனது லிங்கெடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories