இந்தியா

மணிப்பூர் பெண்கள் விவகாரம் : போராடிய பெண் சமூக ஆர்வலர் Rapidoவில் வீடு திரும்பிய போது அத்துமீறிய ஓட்டுநர்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண், Rapidoவில் வீட்டுக்கு திரும்பிய போது ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மணிப்பூர் பெண்கள் விவகாரம் : போராடிய பெண் சமூக ஆர்வலர் Rapidoவில் வீடு திரும்பிய போது அத்துமீறிய ஓட்டுநர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.

இதனால் எல்லை மீறிய மெய்தெய் சமூகத்தினர், குக்கி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் பெண்கள் விவகாரம் : போராடிய பெண் சமூக ஆர்வலர் Rapidoவில் வீடு திரும்பிய போது அத்துமீறிய ஓட்டுநர்

இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்துள்ளனர். மேலும் INDIA கூட்டணியும் 24-ம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவத்தால் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் டவுன் ஹாலில் நேற்று மணிப்பூர் வன்முறைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஆண்கள், பெண்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இதில் பெங்களூர் தெற்கு பகுதியில் வசித்து வரும் பெண் ஆர்வலர் ஒருவரும் பங்கேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து வீடு திரும்ப எண்ணிய அவர், கேப் புக் செய்துள்ளார். ஆனால் எதுவும் புக் ஆகவில்லை என்பதால் வேறு வழியின்றி RAPIDO பைக் புக் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை ஏற்றிக்கொண்ட பைக் ஓட்டுநர், செல்லும் வழியிலே பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

மணிப்பூர் பெண்கள் விவகாரம் : போராடிய பெண் சமூக ஆர்வலர் Rapidoவில் வீடு திரும்பிய போது அத்துமீறிய ஓட்டுநர்

இது குறித்து அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் புகார் அளித்திருந்தார். அதில், "நான் புக் செய்த பைக் வந்தபோது, அது வேறு எதோ பைக் போல் இருந்தது. ஆனால் எனது ஓடிபி-யை நான் கூறி உறுதி செய்தபிறகு அவருடன் பயணித்தேன். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்றபோது, அவர் ஒரு கை மட்டுமே வைத்து வண்டி ஓட்டினார்.

மற்றொரு கையால் அந்த ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்டார். எனினும் இதனை கண்டு பயந்துபோன தான், கத்தி கூச்சலிடாமல் அவருடன் சென்றேன். நான் இறங்கும் இடத்துக்கு சுமார் 200 மீட்டர் தொலைவிலே அவரை நிறுத்த சொல்லி அங்கிருந்து எனது வீட்டுக்கு சென்றேன். சென்ற சில மணி நேரங்களிலே அந்த நபரிடம் இருந்து போன் கால், மெசேஜ் வந்தது. நான் என்ன என்று கேட்டேன்.

மணிப்பூர் பெண்கள் விவகாரம் : போராடிய பெண் சமூக ஆர்வலர் Rapidoவில் வீடு திரும்பிய போது அத்துமீறிய ஓட்டுநர்

மேலும் அவர் எனது வாட்சப் எண்ணுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் செய்தார். இதையடுத்து அவரது எண்ணை நான் பிளாக் செய்தேன். இருப்பினும் அவர் வேறொரு எண்களில் இருந்து என்னை விடாமல் தொடர்பு கொண்டு வருகிறார். பாதுகாப்பு விஷயத்தை Rapido உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் வைரலானதை அடுத்து பெங்களூரு போலீசார், "நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க எஸ்ஜே பார்க் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.'' என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண், Rapidoவில் வீட்டுக்கு திரும்பிய போது ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories