இந்தியா

”நாட்டை காத்த தன்னால் மனைவியை காக்க முடியவில்லை”.. நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் வேதனை!

மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

”நாட்டை காத்த தன்னால் மனைவியை காக்க முடியவில்லை”..  நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஒன்றிய அரசு மணிப்பூர் வன்முறையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனால் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படி மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

”நாட்டை காத்த தன்னால் மனைவியை காக்க முடியவில்லை”..  நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் வேதனை!

இச்சம்பவம் மே 4 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நடந்த போது அங்கு மணிப்பூர் போலிஸாரும் இருந்துள்ளதுதான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து இந்த சம்பவத்தில் 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் மணிப்பூரின் கொடூரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

”நாட்டை காத்த தன்னால் மனைவியை காக்க முடியவில்லை”..  நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் வேதனை!

இந்நிலையில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. இவர் அசாம் ரெஜிமெண்டில் சுபேதாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த கொடூரம் சம்பவம் குறித்து, தான் கார்கில் போரின் போது நாட்டைக் காக்க முடிந்தது. ஆனால், மணிப்பூரில் தன் மனைவியையும், சக மக்களையும் பாதுகாக்க முடியவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories