இந்தியா

பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை.. குரங்கு தாக்கியதில் நேர்ந்த சோகம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தாக்கிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை.. குரங்கு தாக்கியதில் நேர்ந்த சோகம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் செல்லகெரே தாலுகாவில் தோரேகோலம்மனஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சித்தேஷ் என்ற இளைஞருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இந்த சூழலில் மஞ்சுளா கர்ப்பமுற்று கடந்த 2 வாரத்துக்கு முன்னாள் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை.. குரங்கு தாக்கியதில் நேர்ந்த சோகம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

இந்த நிலையில் குழந்தையுடன் இளம்பெண் தனது தாயார் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது குழந்தை வீட்டுக்குள் இருந்தபோது அங்கு வந்த குரங்கு ஒன்று அதனை சரமாரியாக தாக்கியுள்ளது. தாக்குதலில் குழந்தை கத்தி அழுதது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு வந்த தாயார், உடனடியாக அந்த குரங்கை விரட்டி குழந்தையை காப்பாற்றனார்.

பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை.. குரங்கு தாக்கியதில் நேர்ந்த சோகம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

அந்த தாக்குதலில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட குடும்பத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரு வாரத்திற்கு முன்பு குரங்கு கிராமத்திற்கு வந்ததாகவும், மேலும் மக்களைத் தாக்கும் முன் அதிகாரிகள் அதைப் பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இதே போல் வீட்டுக்குள் இருந்த குழந்தையை தூக்கி சென்று மாடியில் இருந்து குரங்கு வீசிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தற்போது பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தாக்கிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories