இந்தியா

சைரன் ஒலித்தபடி பறந்த ஆம்புலன்ஸ்.. வழிவிட்ட வாகன ஓட்டிகள்.. திரைப்படத்தை மிஞ்சி காத்திருந்த அதிர்ச்சி !

ஹைதராபாத்தில், டீ கடையில் பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி வேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சைரன் ஒலித்தபடி பறந்த ஆம்புலன்ஸ்.. வழிவிட்ட வாகன ஓட்டிகள்.. திரைப்படத்தை மிஞ்சி காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக மாறி வருகிறது. அங்கு கடந்த திங்கள்கிழமை அன்று முக்கியமான இடங்களில் ஒன்றான பஷீர்பாக் சந்திப்பு சிக்னல் அருகே அதிக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது.

அப்போது அங்கு திடீரென சைரன் ஒலித்தபடி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனால் அங்கிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக தங்கள் வாகனங்களை ஓரம் கட்டி ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர்.

மேலும், அங்கிருந்த போக்குவரத்து காவலரும் உடனடியாக அந்த சந்திப்பில் இருந்த வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ வேகமான செல்ல வழிஏற்படுத்தி தந்துள்ளார். இதன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் வேகமான அந்த சிக்னலை கடந்து சென்றுள்ளது.

ஆனால், அந்த சிக்னலை கடந்து சுமார் 100 மீட்டர் சென்றதும் அந்த ஆம்புலன்ஸ் சாலையில் ஓரத்தில் இருந்த டீ கடை அருகே நின்றுள்ளது. இதனைக் கவனித்த போக்குவரத்து காவலர் அங்கு எந்த மருத்துவமனையும் இல்லை என்பதால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு பார்த்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரு செவிலியர்கள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்கள் அங்குள்ள கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். மேலும் அந்த ஆம்புலன்சில் எந்த நோயாளியின் இல்லாததை கண்டு அதிர்ந்த போக்குவரத்து காவலர் உடனடியாக ரூ. 1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories