இந்தியா

“ஹர் ஹர் மகாதேவ்” எனக் கூறி தலைமையாசிரியரை விரட்டி தாக்கிய இந்துத்துவ கும்பல்.. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி

பள்ளி தலைமையாசிரியர் ஒருவரை இந்துத்துவ கும்பல் ஒன்று துரத்தி துரத்தி தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹர் ஹர் மகாதேவ்” எனக் கூறி தலைமையாசிரியரை விரட்டி தாக்கிய இந்துத்துவ கும்பல்.. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பசு இறைச்சி வைத்துள்ளதாக பொதுமக்கள் அடித்து கொள்வதும், காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதும் என நாட்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவாக பாஜக ஆதரவு அமைப்புகள் கலவரம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இத்தகைய வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவ கும்பலான பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வதாக அறிவித்து கர்நாடக காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னரே அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பஜ்ரங்தள் அமைப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மஹாராஷ்டிராவில், புனே மாவட்டத்தில் செயல்பட்டுவரும் DY பாட்டீல் உயர்நிலைப் பள்ளியில் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட் என்பவர் பள்ளி தலைமையாசிரியராக செயல்பட்டு வருகிறார்.

இவர் மாணவர்களை கிறிஸ்தவ பிரார்த்தனை செய்யுமாறு கூறியதாக கூறி, இந்துத்துவ அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த தலைமையாசிரியரை துரத்தி துரத்தித் தாக்கியுள்ளனர். இது குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் “ஹர் ஹர் மகாதேவ்” என்று கூறியபடி இந்துத்துவக்கும்பல் அந்த தலைமையாசிரியரை துரத்தி தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில், "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடலைதான் அந்த தலைமையாசிரியர் பாடக்கூறியது தெரியவந்தது. இது குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories