இந்தியா

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு.. ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய டெல்லி AIIMS கல்லூரி மாணவர்கள்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த கும்பலை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு.. ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய டெல்லி AIIMS கல்லூரி மாணவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்பு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என 'நீட்' என்ற தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கணவை சிதைக்கும் வகையில் உள்ளது என தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019 - 20ம் ஆண்டு நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் 2021ம் ஆண்டு டெல்லி, ஜார்கண்ட் மாநிலங்களிலும் முறைகேடு நடந்தது. மேலும் உத்தர பிரதேசம் மாநிலத்திலும் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை டெல்லி போலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு.. ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய டெல்லி AIIMS கல்லூரி மாணவர்கள்!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய் என்ற மாணவர் மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் எய்ம்ஸ் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களை மாநிலம் முழுவதும் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத வைத்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நரேஷ் பிஷ்ரோய், சஞ்சு யாதவ், மஹாவீர், ஜிதேந்திரா ஆகிய 4 பேரை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர். இதேபோல், டெல்லி எய்ம்ஸ் மாணவர்களான மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் நாக்பூரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணையில் முறைகேடு செய்த ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ரூ. 7 லட்சம் நரேஷ் பிஷ்ரோய் வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் யார் யாருக்காக தேர்வு எழுதினார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories