இந்தியா

புதுச்சேரி : சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க ?- கேள்வி கேட்ட பெண்கள்.. நைசாக நலுவிய பாஜக அமைச்சர் !

பாஜக அமைச்சரிடம் அங்கிருந்த பெண்கள் சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என கேள்விகளால் துளைத்தெடுத்த நிலையில், அவர் பதில் சொல்லாமல் நழுவிச் சென்றுள்ளார்.

புதுச்சேரி : சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க ?- கேள்வி கேட்ட பெண்கள்.. நைசாக நலுவிய பாஜக அமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புது தாங்கல் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்திடவும், ஆராய்ச்சிக்குப்பம் வாய்க்காலை தூர்வாரிடவும், சோரியாங்குப்பம் முதல் ஆராய்ச்சிக்குப்பம் வரை தென்பெண்ணையாற்றங்கரையை மேம்படுத்துவதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

இதில் பாஜகவை சேர்ந்த ஊரகவளர்த்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.

இதற்கிடையே கூட்டத்தில், இருந்த பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... ஒரு சிலிண்டர் விலை ரூ.1200 ஆக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். மேலும் எங்கள் கிராமத்துக்கு பேருந்து சரியாக வருவதில்லை. சார் சிலிண்டர் விலையை முதலில் குறையுங்க என்றனர்.

புதுச்சேரி : சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க ?- கேள்வி கேட்ட பெண்கள்.. நைசாக நலுவிய பாஜக அமைச்சர் !

இதனை காதில் வாங்கிக்கொள்ளாத அமைச்சர், அங்கிருந்த பூஜை தட்டை கையில் எடுத்து பணிகள் துவக்க விழாவில் சமஸ்கிருதத்தில் மந்திரத்தை ஓத துவங்கினார்.என்னா சிலிண்டர் விலையை குறைக்க சொன்னதற்கே 10 நிமிடமாக மந்திரம் ஓதுகிறாரே என அங்கிருந்த பெண்கள் கமெண்ட் அடித்தனர்.

பின்னர் பூஜையை முடித்துக்கொண்ட அமைச்சரிடம் சார், இன்னும் பதில் சொல்லவில்லை. சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்விகணைகளை தொடுத்தனர். இதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்டை விட்டு நைசாக நழுவி சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories