இந்தியா

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது

காதலியை கொன்று அவரது உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து நாய்க்கு வீசியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது மிரா சாலை. இங்கு இருக்கும் அபார்ட்மண்ட் ஒன்றில் உள்ள 7-வது மாடியில் சரஸ்வதி வைத்யா என்ற 32 வயது பெண்ணும், மனோஜ் சாஹினி என்ற 52 வயது ஆணும் வாழ்ந்து வந்துள்ளனர். லிவ் -இன் உறவில் இருக்கும் இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வந்துள்ளனர்.

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது

இந்த சூழலில் இவர்கள் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியிலுள்ள போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பிளாட் யாருடையது என்ன என்று விசாரித்தனர். தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர்கள், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது

அங்கே பார்த்தபோது ஒரு பெண்ணின் கால் உட்பட உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த மனோஜையும் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து வீட்டை சோதனை செய்தபோது, அந்த பெண்ணின் உடலை மரம் வெட்டும் கருவி மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 13 பாகங்கள் இருந்துள்ளது.

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது

மேலும் வீட்டில் இருந்த குக்கரில், அந்த பெண்ணின் சில பாகங்கள் வேகவைக்கப்பட்டும் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், வேகவைக்கப்பட்ட பாகங்கள் நாய்களுக்கு உணவாக போட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட காதலன் மனோஜிடம் காதலி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துண்டான கால்.. குக்கரில் வேகவைத்த பாகங்கள்.. பெண் மரணத்தில் நாட்டை உலுக்கும் திக் திக் தகவல் -காதலன் கைது

வீட்டில் இருந்த அனைத்து உடல் பாகங்ளையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டு விசாரித்து வரப்படுகிறது. இருப்பினும் காதலன் மனோஜ் எதற்காக கொலை செய்தார் என்று இன்னும் தெரியவரவில்லை. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரத்தா வாக்கர்
ஷ்ரத்தா வாக்கர்

முன்னதாக இதே போல் டெல்லியில் லிவ் - இன் உறவில் இருந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை திருமணம் செய்ய கூறியதற்காக அவரது காதலனே கொலை செய்து துண்டுதுண்டாக வீட்டி தூக்கி எறிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories