இந்தியா

’காசு எல்லாம் தர முடியாது’.. Toll Gate ஊழியர் அடித்துக் கொலை : வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!

பெங்களூருவில் சுங்கச்சாவடி ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’காசு எல்லாம் தர முடியாது’.. Toll Gate ஊழியர் அடித்துக் கொலை : வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள கரிகல் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார். இவர் பெங்களூரு - மைசூர் இடையே உள்ள சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சுங்கச்சாவடியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் இருந்த இளைஞர்கள் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த மருத்து பவன்குமாருடன் தகராறு செய்தனர்.

இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், காரில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர். பிறகு ஒருவழியாக காரில் வந்தவர்கள் கட்டணத்தைச் செலுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் பவன்குமார் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பவன்குமார் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

’காசு எல்லாம் தர முடியாது’.. Toll Gate ஊழியர் அடித்துக் கொலை : வெளியான அதிர்ச்சி CCTV காட்சி!

பிறகு அங்கு வந்த போலிஸார் உயிரிழந்து கிடைந்த பவன்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஹாக்கிமட்டையால் அடித்து கொலை செய்து விட்டுத் தலைமறைவாக உள்ள மர்ம நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories