இந்தியா

நிலத்தகராறு.. பெற்றோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர மகன்: உ.பியில் பகீர்!

உத்தர பிரதேசத்தில் பெற்றோரை மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தகராறு.. பெற்றோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர மகன்: உ.பியில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஏகா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் யாதவ். இவரது மனைவி குட்டி தேவி. இந்த தம்பதியின் மூத்த மகன் பிது யாதவ்.

இந்நிலையில் மூத்த மகன் பிது யாதவ்வுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் எட்டா மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

நிலத்தகராறு.. பெற்றோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர மகன்: உ.பியில் பகீர்!

இதனைத் தொடர்ந்து நில பிரச்சனை தொடர்பாகப் பெற்றோரிடம் பேசுவதற்காக எட்டா மாவட்டத்திற்கு பிது யாதவ் சென்றுள்ளார். அங்குப் பெற்றோர்களிடம் நில பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார்.

அப்போது மகனுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் பிது யாதவ் தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் பெற்றோர்களைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நிலத்தகராறு.. பெற்றோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர மகன்: உ.பியில் பகீர்!

பின்னர் இருவரது சடலத்தையும் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் தம்பதிகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சனை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பெற்றோர்களைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள மகன் பிது யாதவை பிடிக்க போலிஸார் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். பெற்றோர்களை மகன் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories