இந்தியா

சண்டிகர்: பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 1 வருடமாக தொடர்ந்த கொடுமை.. சக மாணவர்கள் 5 பேர் கைது !

பள்ளி சிறுமியை தனியாக வரவழைத்து 5 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சண்டிகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்: பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 1 வருடமாக தொடர்ந்த கொடுமை.. சக மாணவர்கள் 5 பேர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சண்டிகரில் அரசு பள்ளியில் 12 வயது மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாணவியின் வகுப்பில் படிக்கும் மாணவருமான ஒருவர் ராகிங் செய்துள்ளார். ஆரம்பத்தில் சிறிதாக எண்ணிய சிறுமி, அதனை லேசாக விடவே, பள்ளி அருகே இருக்கும் இடத்தில் வைத்து ஒருமுறை கட்டாய படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்ததால் சிறுமியும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த சிறுவன், அவருடன் சேர்ந்து அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சண்டிகர்: பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 1 வருடமாக தொடர்ந்த கொடுமை.. சக மாணவர்கள் 5 பேர் கைது !

தொடர்ந்து சில மாதங்கள் கழித்து வெளியில் இருந்து இவர்களது நண்பர் ஒருவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படியே 5 பேரும் மாறி மாறி சுமார் 1 வருட காலமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இந்த நிகழ்வு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு காட்டு பகுதியில் மாலை நேரத்தில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

சிறுமியும் இதனை வெளியே சொல்லாமல் அவர்களது மிரட்டல்களுக்கு பயந்து இருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி மிகவும் சோர்வடைந்து காணப்பட்டுள்ளார். எனவே அவரது வகுப்பு ஆசிரியை துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது தனக்கு நடந்த கொடுமையை கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

சண்டிகர்: பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 1 வருடமாக தொடர்ந்த கொடுமை.. சக மாணவர்கள் 5 பேர் கைது !

இதனை கேட்டு அதிர்ந்த டீச்சர், உடனே இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவே அவர்கள் உடனே குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரின் தாயாரையும் வர வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு பள்ளி மாணவியை மிரட்டி அதே பள்ளியில் படிக்குக்ம் சக மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories