இந்தியா

”கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்”.. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

”கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்”..  மல்லிகார்ஜூன கார்கே உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்தியாவே கர்நாடக தேர்தலை உற்றுப்பார்க்கிறது. இதற்குக் காரணம் இந்த ேர்தல் முடிவுதான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைக் கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியில் திரளவேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விட்டு வருகின்றனர். அப்போதுதான் பா.ஜ.கவை வீழ்த்த முடிவும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

”கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்”..  மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கூறியுள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களில் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவுக்கு 78 முதல் 90 இடங்கள் ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 29 இடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிவி-9 நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 99 முதல் 109 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவுக்கு 88 முதல் 98 இடங்கள், ஜேடிஎஸ் கட்சிக்கு 21 முதல் 26 இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 இடங்கள் வரை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் பாஜக 85 முதல் 100 இடங்கள் வரை வெல்லும் எனவும், ஜேடிஎஸ் 24 முதல் 32 தொகுதிகள் வரை வெல்லும் நேரும் கூறப்பட்டுள்ளது.

”கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்”..  மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

ஜி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 118 தொகுதிகள் வரை வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக 79 முதல் 94 இடங்கள் வரை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 25 முதல் 33 இடங்கள் வரை ஜேடிஎஸ் கட்சியும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன, "காங்கிரஸ் கட்சி 130 முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கடந்த ஒருமாதமாகக் கர்நாடகா முழுவதும் நாங்கள் பயணித்து இருக்கிறோம். எல்லா மக்களையும் சந்தித்துள்ளோம். கர்நாடக தேர்தல் முடிவுள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தல் முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சிதான் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories