இந்தியா

“பெண்களுக்கு இலவச பயணம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000” : காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் உறுதி!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பெண்களுக்கு இலவச பயணம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000” : காங்கிரஸ் கட்சியின்  அறிக்கையில் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

“பெண்களுக்கு இலவச பயணம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000” : காங்கிரஸ் கட்சியின்  அறிக்கையில் உறுதி!

இந்நிலையில், இலசவ அறிவிப்புகளை பாஜக நேற்று அள்ளி வீசிய நிலையில், பெங்களூருவில் மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் என பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“பெண்களுக்கு இலவச பயணம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000” : காங்கிரஸ் கட்சியின்  அறிக்கையில் உறுதி!

கர்நாடக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதிகள் :-

* கிரகஜோதி என்ற திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

* கிரகஷ்மி என்ற திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

* அன்ன பாக்யா என்ற திட்டத்தின் அடிப்படையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

* யுவநிதி என்ற அறிவிப்பின் கீழ் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.

* சக்தி திட்டத்தின்கீழ் அனைத்து பெண்களும் மாநிலத்தின் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம்.

இவ்வாறாக 5 வாக்குறுதிகளை அளித்த கார்கே, தனது 6வது வாக்குறுதியின்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முதல்நாளில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.

“பெண்களுக்கு இலவச பயணம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000” : காங்கிரஸ் கட்சியின்  அறிக்கையில் உறுதி!

மேலும்

* வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பஜ்ரங் தள், PFI உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்படும் .

* பா.ஜ.க கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் ஆட்சிக்கு வந்த 1 ஆண்டுக்குள் திரும்பப் பெறப்படும் .

* அட்டவணைப் பிரிவினரின் இடஒதுக்கீடு 15ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 3ல் இருந்து 7 சதவீதம் ஆகவும் அதிகரிக்கப்படும் .

* 4 சதவீத சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மீட்கப்படும்.

* லிங்காயத், வொக்கலிகர் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை அதிகரித்து 9வது அட்டவணையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories